இந்தியாவில், பொதுவாக ஒவ்வொருவரும் தங்க நகைகளை வைத்திருப்பார்கள். குறிப்பாக பண்டிகைக் காலங்களில் தங்க ஆபரணங்களை வாங்குவது என்பது பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகவே இருந்து வருகிறது. அவர்கள் இதை மிகவும் மதிப்புமிக்க உடைமைகளாகக் கருதுவார்கள். தங்கம் என்பது ஒரு மதிப்புமிக்க சொத்து என்பதையும் தாண்டி, உங்கள் அன்புக்குரியவர்களுக்கு நீங்கள் கொடுக்கக்கூடிய அல்லது உங்கள் சந்ததியினருக்கு நீங்கள் விட்டுச்செல்லக்கூடிய மிக விலையுயர்ந்த பரிசுகளில் ஒன்றாகும். ஆனால் தங்கத்தின் மதிப்பானது இத்துடன் முடிவதில்லை.
உங்களது தங்க நகைகளைப் பயன்படுத்தி நீங்கள் கடன் பெறலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்தியாவில், பலர் தங்கநகைக் கடனை சிறந்த அவசரகால நிதி தீர்வுகளில் ஒன்றாகக் கருதுகின்றனர். உண்மையில், கடந்த சில வருடங்களாக தங்கநகைக் கடன் துறை அதிவேகமாக வளர்ந்துள்ளது என்பதுடன் இது எதிர்காலத்தில் மேலும் வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தங்கநகைக் கடன் என்பது ஒரு பணையக் கடனாகும். அதாவது, நீங்கள் கடன் வாங்கும் தொகைக்கு இணையாக தங்க நகைகளை நீங்கள் பணையமாக வைக்கலாம். இங்கு அடமானம் என்கிற விஷயம் இருப்பதால், கடன் வழங்குபவர்களுக்கும் கடன் வாங்குபவர்களுக்கும் தங்கநகைக் கடன் பல நன்மைகளை வழங்குகிறது.
● விரைவானஒப்புதல்மற்றும்வழங்கல்
மற்ற கடன் வகைகளுடன் ஒப்பிடும்போது, இந்தியாவில் தங்கநகைக் கடன் செயல்முறை விரைவாகவும் திறன்மிக்கதாகவும் இருக்கிறது. சவுத் இந்தியன் வங்கி மிக விரைவாகக் கடன் ஒப்புதலை வழங்குவதோடு மட்டுமல்லாமல் நீங்கள் கடன் வாங்கும் தொகையின் அடிப்படையில் பணத்தை நேரடியாக உங்கள் வங்கிக் கணக்கில் உடனே தொகையை டெபாசிட் செய்கின்றது.
தங்கநகைக் கடனைப் பெறுவதற்கு, உங்கள் அருகில் உள்ள வங்கிக் கிளைக்கு நீங்கள் தங்க ஆபரணங்களைக் கொண்டு வர வேண்டும். வங்கியில் பயிற்சி பெற்ற ஊழியர்கள் தங்கத்தின் மதிப்பை, அதன் தூய்மை மற்றும் எடையின் அடிப்படையில் மதிப்பிட்டு, ஆபரணங்களுக்கு ஈடாக அவர்கள் வழங்கக்கூடிய அதிகபட்சக் கடன் தொகையை உங்களுக்குத் தெரிவிப்பார்கள்.
அவர்கள் அளிக்கும் கடன் தொகையை நீங்கள் ஒப்புக்கொண்ட பிறகு, தேவையான ஆவணங்களில் கையொப்பமிட்டு பணத்தை பெற்றுக்கொள்ளலாம். இது உங்கள் அவசர நிதிதேவைகளுக்கு உதவியாக அமைகிறது.
● குறைவானவட்டிவிகிதங்கள்
இந்தியாவில் தங்கநகைக் கடன்களின் பல அனுகூலங்களுக்கிடையே, கடன் பெறுபவர் என்ற முறையில் உங்களுக்கு மிகவும் திருப்தி அளிக்கக் கூடிய விஷயமாக குறைந்த வட்டி விகிதங்கள் தான் இருக்கும். இந்தியாவில் தங்கநகைக் கடனுக்கான வட்டி விகிதங்கள் கடன் வழங்குபவர்கள் ஒவ்வொருவருக்கும் இடையே மாறுபடும், ஆனால் பிற பாதுகாப்பில்லாத கடன்களை விட இதில் வட்டி விகிதம் பொதுவாக குறைவு தான்.
ஏன் அப்படி என்றால், பாதுகாப்பு பிணையாக உங்களது தங்க ஆபரணங்களைத் தந்து நீங்கள் கடனை வாங்குகிறீர்கள், அதனால் கடன் வழங்குபவருக்கு பாதுகாப்பு அளிக்கிறது. நீங்கள் தங்க நகைக் கடனை பெறுவதற்கு விருப்பமிருந்தால், மிகவும் ஏற்புடைய வட்டி விகிதத்தில் தங்கநகைக் கடன்களை வழங்குவதில் புகழ் பெற்ற சவுத் இந்தியன் வங்கியை அணுகி விண்ணப்பிக்கலாம்.
● கிரெடிட்ஸ்கோரின்மீதுதாக்கம்இருக்காது
இந்தியாவில் தங்கநகைக் கடனுக்கும் தனிநபர் கடனுக்கும் இடையில் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, கிரெடிட் ஸ்கோர் என்பது வித்தியாசப்படுகிற மிக முக்கியமான விஷயங்களில் ஒன்றாகும். பொதுவாக, தனிநபர் கடன் அல்லது வேறு ஏதேனும் வகையான கடகளுக்கு நீங்கள் விண்ணப்பிக்கும்போது, உங்களுக்கு கடன் கொடுப்பதற்கான தகுதியை பிரதிபலிக்கும் உங்கள் கிரெடிட் ஸ்கோரின் அடிப்படையில் தான் கடன் வழங்குபவர்கள் உங்கள் கடன் தகுதியை தீர்மானிப்பார்கள். கடன் கொடுப்பவருக்குத் தேவையான குறைந்தபட்ச ஸ்கொரைவிட உங்களது கிரெடிட் ஸ்கோர் குறைவாக இருந்தால், உங்கள் கடன் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் அல்லது உங்களுக்கு கடன் ஆனது மிக அதிக அளவு வட்டி விகதத்துடன் வழங்கப்படலாம்.
ஆனால் தங்கநகைக் கடனைப் பொறுத்தவரை, உங்கள் தங்க ஆபரணங்களை நீங்கள் பிணையமாக கடன் கொடுப்பவருக்கு வழங்குவதால், உங்கள் கிரெடிட் வரலாறு அல்லது தற்போதைய கிரெடிட் ஸ்கோரை பார்க்கமாட்டார்கள். ஏனென்றால், நீங்கள் கடனை திருப்பிச் செலுத்தமுடியவில்லை என்றாலும் கூட, நீங்கள் அடமானம் வைத்த தங்கத்தை விற்கும் உரிமை கடன் கொடுத்தவருக்கு உள்ளது என்பதால் அதை விற்று கடன் தொகையை மீட்டுக்கொள்வார்.
● அதிககடனுக்கான-மதிப்பு (லோன்–டு-வால்யூ) விகிதம்
தனிநபர் கடன் அல்லது பிற கடன் வடிவங்களுக்கு பதிலாக தங்கநகைக் கடனை ஏன் தேர்வுசெய்யவேண்டும் என்று நீங்கள் யோசித்தால், உங்களுக்கு அதிக கடனுக்கான-மதிப்பு விகிதம் (லோன்–டு-வால்யூ) கிடைக்கிறது. இதை ஒரு எடுத்துக்காட்டுடன் எளிதாக புரிந்துகொள்ளலாம்.
உதாரணமாக உங்களுக்கு ரூ. 50 லட்சம் கடன் தேவையிருக்கிறது, அதற்காக உங்கள் வீட்டை அடமானமாக வைக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். பொதுவாக, இந்தியாவில் கடன் வழங்குபவர்கள் சொத்தின் மதிப்பில் 50% வரை சொத்து மீதான கடனாக வழங்குகிறார்கள். அப்படியென்றால், நீங்கள் அடகு வைக்கும் சொத்தின் சந்தை மதிப்பு ரூ.50 லட்சமாக இருந்தாலும், ரூ. 25 லட்சம் மட்டுமே உங்களுக்குக் கடனாகக் கிடைக்கும்.
இருந்தாலும், சவுத் இந்தியன் வங்கி வழங்கும் இந்தியாவின் சிறந்த தங்கநகைக் கடன் திட்டம், வங்கியால் மதிப்பிடப்பட்ட தங்கத்தின் மதிப்பில் 85% வரையில் அதிக LTVஐ உங்களால் பெறமுடியும். ஒப்பீட்டளவில் அதிக கடன் தொகையை நீங்கள் விரைவாக பெறுவீர்கள்.
● பாதுகாப்புக்குஉத்தரவாதம்
இந்தியாவில் தங்கநகைக் கடன்கள் மிகவும் பாதுகாப்பான கடன்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. தங்கநகைக் கடன் மூலமாக, குறைவான வட்டி விகிதத்தில் அதிக கடன் தொகை கிடைப்பது மட்டுமல்லாமல், விரைவாகவும் பணம் வழங்கப்படுகிறது, இதுமட்டுமல்ல, உங்களது மதிப்புமிக்க சொத்தின் முழுமையான பாதுகாப்பிற்கான உத்தரவாதத்தையும் பெறுவீர்கள்.
கடன் வழங்குபவருக்கு பணையமாக நீங்கள் தங்க நகைகளை அடமானம் வைக்கும்போது, உங்கள் விலைமதிப்பற்ற ஆபரணங்களைப் பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் வைத்திருக்கவேண்டியது அவர்களின் பொறுப்பாகும். பொதுவாக, கடன் வழங்குபவர்கள் உங்கள் தங்க ஆபரணங்களை அடமானமாக எடுத்துக் கொள்ளும்போது, அவர்கள் அதை ஒரு பெட்டகத்தில் பாதுகாப்பாக சேமித்து வைப்பார்கள் என்பதை தெரிந்துகொண்டு நீங்கள் கவலையின்றி நிம்மதியாக இருக்கலாம்.
நீங்கள் கடைசி நிலுவைத்தொகையை செலுத்தியவுடன் அல்லது கடனை முழுவதுமாக செலுத்தியவுடன் கடன் வழங்குபவர் உங்கள் தங்கத்தை உடனடியாக திருப்பித் தந்துவிடுவார்.
● தங்கநகைக்கடனுக்குவிண்ணப்பிக்கவேண்டுமா? சவுத்இந்தியன்வங்கியின்சிறந்தசலுகையைப்பெற்றிடுங்கள்
இப்போது உங்களுக்கு தங்கநகைக் கடனின் நன்மைகள் பற்றியும், உங்களுக்கு உடனடியாக நிதித் தேவைப்படும்போது அல்லது அவசர தேவையை பூர்த்தி செய்வதற்கு கடன் பெற இது எப்படி சிறப்பான ஒரு கடனுக்கான தேர்வாக இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியும். நீங்கள் தங்கநகைக் கடன் வழங்குபவரைத் தேடுகிறீர்களானால், சவுத் இந்தியன் வங்கியில் விண்ணப்பிப்பது குறித்து பரிசீலனை செய்யுங்கள்.
இது இந்திய வங்கித் துறையில் நம்பிக்கைக்குப் பாத்திரமான வங்கிகளில் ஒன்றாகும். சவுத் இந்தியன் வங்கியின் மூலம், கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களில் மற்றும் உங்கள் கற்பனைக்கு எட்டாத மிகவும் சாதகமான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் உடன் தங்கநகைக் கடனைப் பெறலாம். அவ்வங்கி மூன்று வகையான தங்கநகைக் கடன்களை வழங்குகிறது - தனிநபர் பிரிவு, விவசாயப் பிரிவு மற்றும் வணிகப் பிரிவு. உங்கள் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப சரியான ஒன்றை நீங்கள் தேர்வு செய்யலாம்.
எளிமையான விண்ணப்பம் பூர்த்திசெய்யும் செயல்முறை மற்றும் விரைவான வழங்கல் மூலமாக எந்த சிக்கலும் இல்லாமல் உடனடியாக நீங்கள் பணத்தைப் பெறச்செய்கிறது.
பொறுப்புத் துறப்பு: இந்த கட்டுரை தகவல் நோக்கத்திற்காக மட்டுமே. இங்கு தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் தனிப்பட்டவை மற்றும் அவை தி சவுத் இந்தியன் வங்கி லிமிடெட் அல்லது அதன் ஊழியர்களின் கருத்துக்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை.வலைப்பதிவு கட்டுரையில் உள்ள உள்ளடக்கங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் ஏதேனும் நிதி/நிதி சாராத முடிவுகளை எடுப்பதால் வாசகருக்கு ஏற்படும் நேரடி/மறைமுக இழப்பு அல்லது கடப்பாடுக்கு சவுத் இந்தியன் பேங்க் லிமிடெட் மற்றும்/அல்லது ஆசிரியர் பொறுப்பாக மாட்டார்கள்.அவ்வாறு முடிவையும் எடுப்பதற்கு முன், தயவுசெய்து உங்கள் நிதி ஆலோசகர் அல்லது சம்பந்தப்பட்ட துறை நிபுணரை அணுகவும்.
Disclaimer: The article is for information purpose only. The views expressed in this article are personal and do not necessarily constitute the views of The South Indian Bank Ltd. or its employees. The South Indian Bank Ltd and/or the author shall not be responsible for any direct/indirect loss or liability incurred by the reader for taking any financial/non-financial decisions based on the contents and information’s in the blog article. Please consult your financial advisor or the respective field expert before making any decisions.